தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் அருகே உள்ள விசுவநாதர் சுவாமி கோயில் நடந்த மாசி மகம் சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேப்பெருமாநல்லூர் பகுதியில் உள்ள விசுவநாதர் சுவாமி கோயிலில், மாசி மகம் சிவராத்திரி நாட்களில் மட்டும் சூரிய வாசல் திறக்கப்படுவது வழக்கம்.
அதன்படி, மாசி மகத்தையொட்டி விஸ்வநாதர் சன்னதி முழுவதும் நான்கு கோடியே 16 லட்சம் ருத்ராட்சங்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்த நிலையில், தேப்பெருமாநல்லூர் மகாமாரியம்மன் கோயிலில் இருந்து 108 கைலாய வாத்தியங்களுடன் ருத்ராட்ச சிவலிங்கம் விஸ்வநாதர் கோயில் வந்தடைந்தது.
ருத்ராட்ச சிவலிங்கம் கோயிலுக்கு வந்ததும் சூரிய வாசலுக்கு விசேஷ தீபாராதனை காட்டப்பட்து நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து சூரியவாசல் திறக்கப்பட்டது. அப்போது, நமச்சிவாய நமச்சிவாய என்ற முழக்கத்துடன் ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
















