விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே விவசாயக் கிணற்றில் கார் விழுந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் வினோத், அவரது நண்பர்களுடன் காரில் திருவண்ணாமலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, செஞ்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார், விவசாய கிணற்றில் மூழ்கியது.
இதில் காரில் பயணம் செய்த நான்கு பேரும் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், கிரேன் உதவியுடன் காரை மீட்டனர்.
மேலும், காரில் இருந்த நான்கு பேரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
















