விமானத்தில் பணிப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரில் திமுக கவுன்சிலர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் கடந்த பிப்ரவரி 25-ம் தேதி திருவள்ளூர் நகராட்சியின் திமுக கவுன்சிலர் பிரபாகரன் தனது நண்பருடன் பயணம் செய்துள்ளார்.
அப்போது, மதுபோதையில் இருந்த இருவரும், விமான பணிப்பெண்ணிடம் சைகை காட்டி அத்துமீறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் அளித்த புகாரில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார்,
தலைமறைவான இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில், டெல்லியில் இருந்து சென்னை வந்திறங்கிய இருவரையும், விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
















