லால்குடி நகராட்சி மன்ற கூட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் குறித்து அதிமுக கவுன்சிலர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர்.
திருச்சி மாவட்டம், லால்குடி நகராட்சி அலுவலகத்தில், நகர்மன்ற தலைவர் துரைமாணிக்கம் தலைமையில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கைகளை முன்வைத்து விவாதம் நடைபெற்றது.
பொது நிதி வழங்குவதில் வெளிப்படைத்தன்மை இல்லை என குற்றம்சாட்டிய உறுப்பினர்கள், பொது நிதியை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், அதிமுக கவுன்சிலர்கள் தங்களது வார்டு பகுதியில் பணிகள் புறக்கணிப்பதாக கூறி அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், நகர்மன்ற கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
















