மக்களின் கோரிக்கைகள் நிறைவேற டபுள் எஞ்சின் அரசு தான் ஒரே தீர்வு என, தென்காசியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் உள்ள புளியங்குடியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக் வால், தென்காசி மாவட்ட மக்களின் அனைத்து கோரிக்கைகளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் என்று தெரிவித்தார்.
இங்குள்ள மக்களின் கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்றித்தரவில்லை என தெரிவித்த மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக் வால், டபுள் எஞ்சின் அரசு அமைந்தால் மட்டுமே மக்களின் அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.
















