பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி கோயில் தெப்பகுளத்தில், அகில பாரத சன்னியாசிகள் சங்கத்தினர் மகா ஆரத்தி மேற்கொள்ள அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி பகுதியில் அமைந்துள்ள பூதலிங்கசுவாமி கோயிலில் பக்தர்கள் சேவா சங்கம் மற்றும் அகில பாரத சன்னியாசிகள் சங்கம் சார்பில் கங்கா தேவியை போற்றும் விதமாக மகா ஆரத்தி நிகழ்ச்சி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கு, அறநிலையத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து மகா ஆரத்தி மேற்கொள்ளவிருந்த அகில பாரத சன்னியாசிகளை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதனை தொடர்ந்து, தெப்பக்குளத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து கோயில் கலையரங்கத்தில் மகா ஆரத்தியை சன்னியாசிகள் மேற்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ எம்.ஆர்.காந்தி மற்றும் சாதுக்கள், சன்னியாசிகள், ஆன்மீக பெரியோர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
















