ஒடிசா மாநிலம், பொது போக்குவரத்துறையில் புரட்சியை செய்து காட்டி, இன்று ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஒடிசா மாநில தலைநகரான புவனேஸ்வர், தனது நகர்ப்புற பேருந்து சேவையை நவீனமயமாக்குவதே மக்களின் தேவையை நிறைவு செய்யும் என்பதை அம்மாநில பாஜக அரசு கண்டறிந்தது.
அனைத்து பேருந்துகளிலும் CCTV கேமராக்கள் மற்றும் அவசர கால பொத்தான்கள், பேருந்துகள் எங்கு வருகின்றன என்பதைத் துல்லியமாகக் காட்டும் ‘ரியல்-டைம்’ கண்காணிப்பு வசதி மற்றும் பேருந்து நிறுத்தத்திலிருந்து வீட்டிற்குச் செல்ல மின்சார ரிக்ஷாக்கள் என அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இந்த மாற்றங்கள் வெறும் அலங்காரத்திற்காகச் செய்யப்பட்டவை அல்ல என்பது புள்ளிவிவரங்கள் மூலம் உறுதியாகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்ட பிறகு பயணிகளின் எண்ணிக்கை 200% அதிகரித்துள்ளது. மிக முக்கியமாக, சொந்த வாகனங்களைப் பயன்படுத்தி வந்தவர்களில் 57% பேர் இன்று பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இது அந்த நகரத்தின் காற்று மாசுபாட்டைக் குறைப்பதோடு, சாலை நெரிசலையும் பெருமளவு குறைத்துள்ளது.
ஒடிசாவில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு, பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அம்மாநில மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
















