மிகுந்த உற்சாகத்துடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய வெளிநாட்டினர்!
Mar 15, 2026, 02:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மிகுந்த உற்சாகத்துடன் ஹோலி பண்டிகை கொண்டாடிய வெளிநாட்டினர்!

Manikandan by Manikandan
Mar 4, 2026, 04:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகையை வெளிநாட்டினர் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

வடஇந்தியாவில் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக ஜெய்ப்பூரின் புகழ்பெற்ற காசா கோதி பகுதியில் சுற்றுலாத் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்ச்சியில், நூற்றுக்கணக்கான வெளிநாட்டுப் பயணிகள் கலந்துகொண்டு ஹோலி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.

காசா கோதி ஹோட்டல் வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளைத் தூவி தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். ராஜஸ்தானின் பாரம்பரிய இசை மற்றும் மேள தாளங்களுக்கு ஏற்ப வெளிநாட்டினர் நடனமாடியது பார்ப்பவர்களைக் கவர்ந்தது.

பண்டிகையின் ஒரு பகுதியாக, சுற்றுலாப் பயணிகளுக்கு ராஜஸ்தானின் பாரம்பரிய உணவுகள் வழங்கப்பட்டன. மேலும், உள்ளூர் நாட்டுப்புறக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் விழாவிற்கு கூடுதல் மெருகூட்டின.
இந்திய மக்களின் விருந்தோம்பலை உணரவும் இந்த நிகழ்ச்சி ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்ததாகப் பயணிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Tags: colorscelebratingRajasthanJaipurHoliஹோலி பண்டிகைforeigners
ShareTweetSendShare
Previous Post

ஒடிசாவில் மாபெரும் புரட்சி – பாஜக அரசு செய்த சாதனை!

Next Post

இரண்டு முக்கிய திட்டங்களுக்குப் பாதுகாப்பு கொள்முதல் வாரியம் பச்சைக்கொடி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies