லடாக்கில் இந்தோ திபெத்திய பாதுகாப்பு படையினர், பழங்குடியின மக்களுடன் இணைந்து ஹோலி பண்டிகையை கொண்டாடினர்.
நாடு முழுவதும் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் லடாக்கில் இந்தோ திபெத்திய பாதுகாப்பு படையினர், பழங்குடியின மக்களுடன் இணைந்து ஒருவருக்கொருவர் வண்ணம் பூசி ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.
















