பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மாநிலங்களவை வேட்பாளராக நிதிஷ் குமார் வேட்புமனு தாக்கல் செய்தார்.
நாடு முழுவதும் 37 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதால் மார்ச் 16ஆம் தேதி அதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மாநிலங்களவை வேட்பாளர்களாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
பாட்னாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அவர்கள் வேட்பு மனுவில் கையொப்பமிட்டனர். பின்னர் நிதிஷ் குமார் மற்றும் நிதின் நபின் வழங்கிய வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர்.
















