திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியில் இருந்த செவிலியர் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால் மருத்துவமனையை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
சமயபுரம் அருகே நரசிங்கமங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் இல்லாமல் குறைவான மருத்துவ ஊழியர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இரவு நேரத்தில் செவிலியர் ஜாஸ்மின் எப்பொழுதும் ஆரம்ப சுகாதார நிலையத்தை வெளியில் பூட்டிவிட்டு உள்ளே அமர்ந்து கொண்டு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்காமல் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கும் அல்லது தனியார் மருத்துவமனைக்கும் செல்ல அறிவுறுத்துவதால் அப்பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
















