யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தை சேர்ந்த ராஜேஸ்வரி சுவே தேசிய அளவில் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வின் எழுத்து தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் மாதமும், 2026 பிப்ரவரியில் நேர்முகத் தேர்வும் நடைபெற்றது. தற்போது அதன் முடிவுகளை யுபிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் 958 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதில் ராஜஸ்தானை சேர்ந்த அனுஜ் அக்னிஹோத்ரி என்பவர் இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். தொடர்ந்து மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த ராஜேஸ்வரி சுவே இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் டாப் ரேங்கில் தேர்வாகி தற்போது துணை ஆட்சியராக பணியாற்றி வருகிறார்.
















