ஈரான் தலைநகர் தெஹ்ரானில், இஸ்ரேல் ராணுவம், 50 ஜெட் விமானங்களை பயன்படுத்தி பதுங்கு குழிகளை அழித்த காட்சி வெளியாகி உள்ளது.
அணு அயுத ஒப்பந்தம் தோல்வி அடைந்ததால், ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஈரானின் உச்சதலைவர் கமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களை குறி வைத்து ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தநிலையில் இஸ்ரேல் ராணுவம், 50 ஜெட் விமானங்களை பயன்படுத்தி, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள பதுங்கு குழிகள் மீது சரமாரியாக குண்டு மழை பொழிந்தது.
இந்த பதுங்கு குழிகள் ஈரானிய உயர் மட்டத் தலைவர்கள் அவசர காலங்களில் பயன்படுத்தும் கட்டளை மையமாகச் செயல்பட்டு வந்ததாகவும், மொசாட் அளித்த தகவலின்படி இந்த பதுங்கு குழிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















