அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈரானுக்கு ரகசிய தகவல்களை ரஷ்யா வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்ய அதிபர் புதின் நேற்று ஈரான் அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, அமெரிக்க ராணுவ இலக்குகளைத் தாக்குவதற்கு உதவக்கூடிய முக்கிய ரகசியத் தகவல்களை ஈரானுக்கு ரஷ்யா வழங்கியுள்ளதாக உளவுத்துறை தகவல் வெளியாகியுள்ளன.
ஈரானைச் சுற்றியுள்ள பகுதிகளில் இயங்கும் அமெரிக்கப் போர்க்கப்பல்கள், விமானங்களைக் கண்காணிக்கவும், தாக்கவும், இந்தத் தகவல்கள் ஈரானுக்கு உதவும் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, உக்ரைனுக்கு எதிரான போரில், ஈரானின் டிரோன்களை ரஷ்யா பயன்படுத்தியாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டியிருந்தன. இந்த சூழலில், ரகசிய தகவல்களை வழங்கியதன் மூலம் ஈரானுக்கு ரஷ்யா மறைமுகமாக உதவி வருவதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
















