ஈரானுக்கு எதிரான தாக்குதலில் தினசரி 8,180 கோடி ரூபாய் செலவு செய்யப்படுவதாக அமெரிக்கா ஆய்வு அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.
ஈரான் மீது தாக்குதலை தொடர்ந்த அமெரிக்காவுக்கு முதல் 100 மணி நேரத்தில் 33,966 கோடி ரூபாய் செலவாகி உள்ளதுதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரில் குறைந்த செலவிலான தற்கொலைப் படை டிரோன்களை ஈரான் பயன்படுத்தி வருகிறது. ஆனால், இவற்றை தடுக்க அமெரிக்கா மிக அதிக செலவுடைய தடுப்பு ஏவுகணைகளை பயன்படுத்தி வருகிறது.
இதே நிலை நீடித்தால் வரும் நாட்களில் பல ஆயிரம் கோடிகளை போருக்காக செலவிட நேரிடும் என பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
















