விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நடந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
செஞ்சியில் உலக மகளிர் தினத்தையொட்டி பெண்கள் மட்டும் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.
விழுப்புரம் சாலை தொடங்கி சத்திர தெரு, திருவள்ளுவர் தெரு, திருவண்ணாமலை சாலை வழியாக சென்று நான்குமுனை கூட்ரோட்டில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நிறைவு பெற்றது.
இதில், ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும், மாணவிகள் பல்வேறு சாகசங்களை நிகழ்த்திக்காட்டி திறமையை வெளிப்படுத்தினர்.
















