புதுச்சேரியில் கெட்டுப்போன கேக்கை விற்றதாக கூறி வாடிக்கையாளர்கள் பேக்கரியை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி, வழுதாவூர் சாலையில் உள்ள பேக்கரியில், ஒருவர் தனது குழந்தையின் பிறந்தநாளுக்காக கேக் ஒன்றை வாங்கியுள்ளார்.
வீட்டிற்கு சென்று பார்த்த போது, அந்த கேக் கெட்டுப்போய் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கேள்வி கேட்ட போது, பேக்கரி ஊழியர்கள் முறையாக பதிலளிக்கவில்லை என தெரிகிறது.
ஆத்திரமடைந்த வாடிக்கையாளரும் அவருடன் வந்தவர்களும், கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பேக்கரியில் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கினர்.
இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
















