திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள அக்ரகாரம் ஏரிக்கு வெளிநாட்டு பறவைகள் படையெடுத்துள்ளதால் வேடந்தாங்கல் போல ரம்மியமாக காட்சியளிக்கிறது.
அக்ரகாரம் ஏரியில் நீர் வற்றியுள்ளதால் அதில் உள்ள மீன்கள், நத்தைகள், புழு பூச்சிகளை உண்பதற்காக ஆயிரக்கணக்கான பறவைகள் ஒரே நேரத்தில் குவிந்துள்ளன.
ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகளும் மற்றும் வெள்ளை நாரை, நத்த கொத்தி மயில் சிறவி, சாம்பல் நாரை உள்ளிட்ட பறவைகள் ஏரியில் முகாமிட்டுள்ளன.
அக்ரகாரம் ஏரியில் மீன்களை பிடித்து உண்ணும் வெளிநாட்டு பறவைகளை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
















