மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் ரங் பஞ்சமி விழா வண்ணமயமாக கொண்டாடப்பட்டது.
ஹோலி பண்டிகை முடிந்த ஐந்தாம் நாளில் பாரம்பரியமிக்க ரங் பஞ்சமி திருவிழா கொண்டாடப்படும். பகவான் கிருஷ்ணர் மற்றும் ராதையின் தெய்வீகக் காதலின் அடையாளமாக இந்த திருவிழா கருதப்படுகிறது.
அந்த வகையில் மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் ரங் பஞ்சமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
வண்ணப்பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசிக் கொண்டும் பாரம்பரிய இசைக்கேற்ப உற்சாகமாக நடனமாடியும் விழாவைக் கொண்டாடினர். இந்த விழாவில் இந்தூர் நகரமே வண்ணங்கள் நிறைந்து காணப்பட்டது
















