தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளின் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.
வனப்பகுதியில் இருந்து தண்ணீர் மற்றும் உணவு தேடி ஊருக்குள் வரும் காட்டுயானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தநிலையில் கம்மாளப்பட்டி பகுதியில் யானைகள் உலா வந்ததால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
யானை நடமாட்டத்தை கட்டுப்படுத்த வனப்பகுதிகளில் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















