சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனை நீக்கக்கோரி ரிப்பன் மாளிகை வளாகத்தில் மாநகராட்சி செங்கொடி சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களின் கோரிக்கை குறித்து பேச சென்றபோது, காது கொடுத்துகூட கேட்காமல் கண்ணியமற்ற முறையில் குமரகுருபரன் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
தொழிலாளர்கள் இடையே பாகுபாட்டை உருவாக்கி, தொழிலாளர்கள் மத்தியில் மோதலை உருவாக்கும் வேலையை மாநகராட்சி நிர்வாகம் செய்வதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக உபகரணங்கள் வழங்க வேண்டும் என வலியுறுத்திய சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தினர்,
மாநகராட்சி நிர்வாகத்தில் ஊழல் தலைவிரித்தாடுவதாக தெரிவித்தனர்.
















