திமுகவின் மாநில மாநாட்டிற்காக அரசு பேருந்துகள் சென்றதால் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் போதிய பேருந்துகள் இல்லை என பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருச்சியில் நடைபெற்ற திமுகவின் மாநில மாநாட்டிகாக மாநிலம் முழுவதும் உள்ள ஆட்களை ஏற்றி செல்ல அரசு பேருந்துகளை திமுகவினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிலையில், தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பணி முடிந்து வீடுகளுக்கு த்து தங்கள் பகுதிக்கு செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் பொதுமக்கள் தவித்தனர்.
மேலும், வெளியூர் செல்லும் அரசு பேருந்துகளை சிறைபிடித்து நிலை அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
















