சேலத்தில் தேனீக்களை பாதுகாத்து, உயிரோடு மீட்டெடுப்பது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு சிறப்பு பயிற்சியுடன் ஒத்திகை நடத்தி காட்டப்பட்டது.
தேனீக்களை பாதுகாக்கும் நோக்கில் தமிழகம் முழுவதும் தீயணைப்பு வீரர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்க வேண்டும் என தீயணைப்புத் துறை டிஜிபி சீமா அகர்வால் உத்தரவிட்டார்.
அதன்படி, சேலம் மண்டல தீயணைப்புத்துறை துணை இயக்குநர் கல்யாணகுமார் தலைமையில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 70 தீயணைப்பு வீரர்களுக்கு சிறப்பு பயிற்சியுடன் ஒத்திகையும் நடத்திக் காட்டப்பட்டது.
இதில், குடியிருப்பு பகுதியில் உள்ள கொசு தேனீக்கள், அடுக்கு தேனீக்கள், மலை தேனீக்கள் ஆகியவற்றை மீட்டு காப்பு காட்டில் விடுவதற்கான ஒத்திகை நிகழ்த்தப்பட்டது.
















