கரூரில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற்ற போட்டியில் முறைகேடு நடந்ததாகக்கூறி, பரிசளிப்பு விழாவில் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் கரூர் மாவட்டம் ஆர்.டி.மலை பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நடுவராக தனியார் பள்ளி ஆசிரியர் இருந்த நிலையில், தனியார் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மூன்று பரிசுகள் வழங்கப்பட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டினர்.
இதனிடையே, பரிசளிப்பு விழாவிற்கு வந்த பெற்றோர்கள், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போட்டி நடைமுறையில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.
மாணவர்கள் இருவர் கண்டன கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
















