கோவை அருகே துணை சுகாதார நிலையம் வீடாக மாற்றப்பட்ட விவகாரத்தில், செவிலியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
கோவை வடவள்ளி துணை சுகாதார நிலையத்தில் கனிதா என்பவர் நகர்ப்புற சுகாதார செவிலியராக பணியாற்றி வந்தார்.
இவரது கணவர் திமுக நிர்வாகியாக உள்ள நிலையில், துணை சுகாதார நிலையத்தை கனிதா வீடாக மாற்றி பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.
இதுதொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதன்பேரில் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் அறைகளை பயன்படுத்தியதாக கூறி, செவிலியர் கனிதாவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர் உத்தரவிட்டார்.
















