அமெரிக்காவில் நடைபெற்ற மாரத்தான் பந்தயத்தில், கடைசி நிமிடத்தில் அந்நாட்டு வீரர் இலக்கை அடைந்து வெற்றி பெற்ற காட்சி வெளியாகி உள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸில் போட்டி நடைபெற்றது. இதில் கென்ய வீரர் மைக்கேல் கிமானி கமாவ், நிர்ணயிக்கப்பட்ட எல்லை கோட்டை நோக்கி ஓடிவந்தார்.
கென்ய வீரர்தான் வெற்றி பெறுவார் என அங்கு கூடியிருந்த ரசிகர்கள் நினைத்தனர்.
ஆனால் பின்னால் வந்த அமெரிக்க வீரர் நாதன் மார்ட்டின் திடீர் வேகமாக வந்து வெற்றி கோட்டை அடைந்தார்.
இதனால் கடைசி ஒரு நொடியில் போட்டி முடிவு மாறியது.
















