அருணாச்சல் பிரதேசத்தில், ஏற்பட்ட காட்டுத்தீயை, இந்திய விமானப்படை சார்பில் அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அருணாச்சலின் மெபோ மற்றும் சிகார் பகுதிகளில் உள்ள காடுகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அணைக்கும் முயற்சியில் இந்திய விமானப்படை ஈடுபட்டுள்ளது.
அதன்படி Mi-17 V5 ரக ஹெலிகாப்டர் மூலம், அங்குள்ள ஆற்றில் தண்ணீரை எடுத்து, தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















