உத்தரப்பிரதேசத்தில் ராமாயண கதை தொடர்பான சிற்பங்களுடன் கூடிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
மொராதாபாத்தில் ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் மாநகராட்சி சார்பில், “ராம் அனுமன்” என்ற பெயரில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
அதில் கடவுள் ராமரின் வாழ்க்கை வரலாற்று சிற்பங்கள் மற்றும் அனுமனின் வீரச்செயல்கள் மிக அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன.
மேலும் ராமர் இலங்கையில் நிகழ்த்திய போர் குறித்த சிற்பங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.
















