கோவையில் அறவழியில் போராடிய பா.ஜ.க-வினரை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ததுடன், போராட்ட பந்தலையும் அப்புறப்படுத்தினர்.
அனைத்து ரேஷன் கடைகளிலும் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்க வலியுறுத்தி கோவை சிவானாந்தா காலனி பகுதியில் பா.ஜ.க.வை சேர்ந்த மத்திய அரசு நலத்திட்ட பிரிவினர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.
இதற்கு அனுமதியில்லை எனக்கூறி போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதனைக் கண்டித்து பா.ஜ.க நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
















