சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஆரோவில்லில் பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, ஆரோவில்லில் உள்ள பாரத் நிவாஸ் அரங்கில், “அன்னை ஸ்ரீ அரவிந்தருடன் ஒரு இசை சங்கமம்” என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் கலந்துகொண்டு, காலத்தால் அழியாத பக்திப் பாடல்கள் மற்றும் திரைப்பட பாடல்களை பாடி ரசிகர்களை தன்வசப்படுத்தினார்.
திரைப்படங்களில் சூழல்களுக்கு ஏற்ப பாடல்களை உருவாக்கிய விதம் மற்றும் தனது சகோதரர் இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றிய அனுபவங்களையும் கங்கை அமரன் நினைவுகூர்ந்தார்.
















