இந்து மதத்தினரின் நம்பிக்கையை ராகுல் காந்தி கிண்டல் செய்கிறார் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமீபத்தில் நடந்த கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய ராகுல், தரவுகள் மற்றும் புத்தாக்கம் குறித்த கேள்விகளைத்தான் இந்திய அரசியல்வாதிகள் கலந்தாலோசிக்க வேண்டும் எனவும், அதுதான் நமது மிகப்பெரிய வளம் எனவும் கூறினார்.
அதை விடுத்து பசு மாட்டின் சிறுநீர் உடலுக்கு நல்லதா என விவாதிக்க கூடாது என தெரிவித்தார். இந்நிலையில் ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், ராகுல் காந்தி இந்து மத நம்பிக்கைக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளதை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்துள்ளதாகவும் பாஜக விமர்சித்துள்ளது.
















