வளைகுடா போரால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலை சமாளிக்க, வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களின் உற்பத்தி 25 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வளைகுடா போரால் உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்து வரும் சூழலில், இந்தியர்களின் நலன் காத்திட எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்க மத்திய அரசு சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
மத்திய பெட்ரோலியத்துறை, வெளியுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
அப்போது பேசிய மத்திய பெட்ரோலியத்துறை இணை செயலாளர் சுஜாதா ஷர்மா, எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில், மக்கள் மாற்று சிலிண்டர்களை பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
















