இந்தியா நோக்கி வந்த தாய்லாந்து கப்பல் மீது ஹோர்முஸ் ஜலசந்தி அருகே தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் – அமெரிக்கா போர் 10 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதனால், மேற்காசியாவில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது.
உலகில் 20 சதவீத எண்ன்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இதனால், கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தாய்லாந்தில் பதிவு செய்யப்பட்ட சரக்கு கப்பல் ஒன்று, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துறைமுகத்தில் இருந்து குஜராத்தின் கண்ட்லா துறைமுகம் நோக்கி கிளம்பியது.
ஹார்முஸ் ஜலசந்தி அருகே இந்த கப்பல் வந்த போது, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தாய்லாந்து கடற்படை தகவல் தெரிவித்துள்ளது. இந்த கப்பலில் இருந்த 20 மாலுமிகள் மீட்கப்பட்டு விட்டதாகவும், 3 பேரை காணவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
















