அம்பாசமுத்திரம் அருகே 16 வயது சிறுவன் அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு பூக்கட்டும் தொழில் செய்து வருகிறார்.
இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு பயிலும் மாணவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் நடந்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த 11ஆம் வகுப்பு மாணவன் வீட்டிற்கு சென்று அரிவாளை எடுத்து வந்து, 16 வயது சிறுவனை பலமாக தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார்.
இதில், படுகாயமடைந்த சிறுவனை அப்பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக 16 வயது சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 11ஆம் வகுப்பு மாணவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















