பெட்ரோல் தட்டுப்பாடு வதந்தி - பங்குகளில் குவிந்த வாகன ஓட்டிகள்!
Mar 15, 2026, 07:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெட்ரோல் தட்டுப்பாடு வதந்தி – பங்குகளில் குவிந்த வாகன ஓட்டிகள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 13, 2026, 07:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் பெட்ரோல் தட்டுப்பாடு வதந்தி காரணமாக பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகளின் கூட்டம் அலைமோதியது.

போளூரில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வதந்தி பரவியது. இதனால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் பெட்ரோல், டீசல் நிரப்புவதற்காக பெட்ரோல் பங்குகளில் குவிந்தனர். மேலும் சிலர் பாட்டில்கள் மற்றும் கேன்களிலும் பெட்ரோலை நிரப்பி சென்றனர். இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள பெட்ரோல் பங்கில், டீசல் காருக்கு பெட்ரோல் நிரப்பியதால் சுமார் 2 மணி நேரம் காத்திருந்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

செஞ்சி அடுத்த மேல்மலையனூரில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வதந்தி காரணமாக நள்ளிரவுமுதல் கேன்களில் பெட்ரோல், டீசல் வாங்கிச் சென்று இருப்பு வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், பணிச்சுமையால் குழப்பமடைந்த பணியாளர் ஒருவர், கார் ஒன்றுக்கு டீசல் நிரப்புவதற்கு பதிலாக பெட்ரோலை நிரப்பியதாக தெரிகிறது. இதையடுத்து, அந்த காரில் இருந்து பெட்ரோலை எடுக்க சுமார் இரண்டு மணி நேரம் ஆனது. இதனால் அந்த பங்கில் பெட்ரோல், டீசல் விநியோகம் நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த பொதுமக்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.

சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லக்கூடிய கொடைக்கானலிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து எரிபொருள் நிரப்பிச் சென்றனர்.

காரைக்கால் மாவட்ட எல்லையில் உள்ள பெட்ரோல் பங்குகளில் தமிழக வாகன ஓட்டிகள் குவிந்தனர்.திருவாரூர், நாகை மாவட்டங்களைச் சேர்ந்த வாகன ஓட்டிகள், காரைக்கால் அடுத்த மாவட்ட எல்லையான அம்பகரத்தூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் குவிந்தனர். பெட்ரோல் மற்றும் டீசல்களை வாகனங்களில் நிரப்ப இருசக்கர வாகனங்களில் அதிக அளவிலான வாகன ஓட்டிகள் வந்னர்.
மேலும் கேன்களில் பெட்ரோல், டீசல் வாங்க வந்த சிலரை போலீசார் கடுமையாக எச்சரித்து விரட்டியடித்தனர். பெட்ரோல் பங்கில் தட்டுப்பாடு இல்லை என்றும் அறிவுறுத்தினர்.

Tags: iran attack uaeiran attackediran attack dubaiiran uae attackiran attack on dubaicrowd in petrol pumbsiran attack israelisrael iran attackiran attackiran attacks
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் போதுமான அளவு கையிருப்பில் உள்ளது – இந்திய ஆயில் நிறுவனம்

Next Post

மதுரையில் கள்ளச்சந்தையில் சிலிண்டர் விற்பனை – குண்டர் சட்டத்தில் இருவர் கைது!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies