கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தேவாலயம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.
சூளகிரி அடுத்த மந்தகுட்ட கிராமத்தில், எல்லப்பா என்பவர் சட்டவிரோதமாக கிறிஸ்துவ தேவாலயம் அமைப்பதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் இந்து முன்னணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் அளித்தனர்.
ஆனால் அவர் நடவடிக்கை எடுக்காததால் மக்கள் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
















