டெல்லியில் உள்ள இல்லத்தில் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியை முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வெங்கையா நாயுடு, அத்வானியைத் தனது அரசியல் பயணத்தின் வழிகாட்டியாகவும், குருவாகவும் நினைப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், தேசப்பற்று மிக்க ஒரு ஜாம்பவானைச் சந்தித்தது தமக்கு ஒரு மனநிறைவான அனுபவம் என்றும், தனது வாழ்க்கைப் பாதையை வடிவமைத்ததில் அத்வானிக்கு பெரும் பங்கு உண்டு என்றும் வெங்கைய நாயுடு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
















