நேபாளத்தில் இந்தியாவின் யுபிஐ மூலம் பணம் செலுத்திய இந்திய பயணியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியாவின் டிஜிட்டல் புரட்சியான யுபிஐ வசதி இப்போது அண்டை நாடான நேபாளத்திலும் தடையின்றி செயல்படத் தொடங்கியுள்ளது.
இது குறித்து இந்திய பயணி ஒருவர் வெளியிட்ட வீடியோவில், நேபாளத்தின் ஒரு சிறிய கடையில் பொருட்களை வாங்கிவிட்டு, தனது மொபைல் ஆப் மூலம் க்யூஆர் கோட் ஸ்கேன் செய்து மிக எளிதாகப் பணம் செலுத்தியுள்ளார்.
இந்திய ரூபாயில் உள்ள தொகை தானாகவே நேபாள ரூபாயாக மாற்றப்பட்டு, ஒரு சில நொடிகளில் பரிவர்த்தனை முடிவடைந்ததை அவர் ஆச்சரியத்துடன் பகிர்ந்துள்ளார்.
நேபாளம் செல்லும் இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு இனி பணப் பரிமாற்றம் மிகவும் எளிதாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
















