மானாமதுரையில் விசாரணை கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கில் காவல் ஆய்வாளர் உட்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இரட்டை கொலை வழக்கில் கைதான இளைஞர் ஆகாஷ் டெல்சன், காவல்துறை விசாரணைக்கு பின் உயிரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றம்சாட்டி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து முறையாக தகவல் அளிக்காததால் சிவகங்கை எஸ்.பி-யின் தனிப்பிரிவு ஆய்வாளராக இருந்த வெங்கடேச பெருமாள் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் ஆகாஷை கைது செய்தபோது மானாமதுரை காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளராக பணியில் இருந்த திருப்புவனம் காவல் ஆய்வாளர் திலிபன் உள்ளிட்ட 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளன்.
சார்பு ஆய்வாளர் குகன், காவலர்கள் தெய்வேந்திரன், காளீஸ்வரன், சரத்குமார், மனோகரன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
















