நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதாகி வெளிவந்த இயக்குநர்களின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி பல மனுக்கள் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் அதிக வட்டி தருவதாக கூறி பல்லாயிரம் கோடி வரை மோசடி நடந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட இயக்குநர்களை கைது செய்தனர்.
இந்நிலையில் அவர்கள் ஜாமினில் வெளிவந்துள்ள நிலையில் ஜாமீனை ரத்து செய்யக்கோரி பல மனுக்கள் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. நியோமேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 7 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் 4 வகைகளாக பிரித்து விற்பனைக்கு தயாராக உள்ளது.
நிலங்களை வாங்குவதற்கு ஆன்லைன் பதிவு கட்டணமாக ஆயிரம் ரூபாய் மட்டும் வசூலிக்கப்படுகிறது. மற்றபடி எந்த கட்டணமும் கிடையாது என்று வழக்கறிஞர் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி இந்த திட்டம் என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் தான் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர், தனிநபர்கள் எத்தனை என்பதை கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் தகவல் சென்றடையும் விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
















