தேர்தலில் ஒன்றாக பணியாற்றி ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்புவோம் என முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்ட அதிமுக சார்பில் தமிழகத்தில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக வரும் செவ்வாய்க்கிழமை என்டிஏ கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
அப்போது பேசிய அவர் தேர்தல் நெருங்கும் சமயத்திலிருந்து அனைவரும் கடினமாக பணியாற்றி நாம் அனைவரும் ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்புவோம் என்று தெரிவித்தார்.
















