திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள சண்முக நதியின் கரையோரம் மலைபோல் தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.
பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீராடும் முக்கிய இடமாகச் சண்முக நதி விளங்கி வருகிறது. அ.கலையமுத்தூர் ஊராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் சண்முக நதியின் கரையொரங்களில் கொட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இறைச்சிக் கழிவுகளால் தெருநாய்கள் தொல்லை ஏற்படுவதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
குப்பைகள் அவ்வப்போது எரிக்கப்படுவதால், அந்தப் பகுதி முழுவதும் நச்சுப் புகை சூழ்ந்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
















