தூத்துக்குடி பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், அமைச்சர் கீதாஜீவன், கனிமொழி எம்பி ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டுமென பாஜக மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து பாஜக சார்பில் சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் ஆறுதல் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா, புகாரளித்த உடனே போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தால், சிறுமியை பாதுகாத்திருக்கலாம் என கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற கூட முதலமைச்சர் ஸ்டாலின் வரவில்லை எனவும் சிறுமிக்கு நிகழ்ந்த அநீதிக்கு ஒவ்வொரு பெண்ணும் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
















