கேஸ் சிலிண்டர் விநியோகம் குறித்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கும் விதமாக மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் டெல்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ஹோர்முஸ் நீரிணையை கடந்து இரண்டு LPG கப்பல்கள் இந்தியா நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும், மார்ச் 17-ம் தேதி வாக்கில் அந்த கப்பல்கள் குஜராத் வந்தடையும் என்றும் தெரிவித்தனர்.
சுமார் 92 ஆயிரம் மெட்ரிக் டன் எரிவாயு, கப்பல்கள் மூலம் கொண்டு வரப்படுவதாகக் கூறிய அவர்கள், LPG குறித்து மக்கள் அச்சமின்றி இருக்குமாறும், தேவையின்றி முன்பதிவு செய்ய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர்.
















