அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தம்பிதுரை, தனது தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்த அவர், எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
பின்னர் பேசிய தம்பிதுரை, தான் தொடர்ந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், துணை முதலமைச்சர் என்பது சாதாரண பதவி தான் எனவும், அந்த பதவிக்காக காவல்துறையினர் அதிக மரியாதையை கொடுத்து வருவதாகவும் விமர்சித்தார்.
















