குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள உதவி ஆய்வாளர், வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர் உள்பட பல்வேறு பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
சென்னையில் உள்ள தேர்வு மையத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மார்ச் 15ஆம் தேதி குரூப் 2, 2ஏ தேர்வுகள் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி, தமிழக முழுவதும் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள், இன்று தொடங்கி நடைபெற்று வருகின்றன. சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி ரவுண்டானா அருகே உள்ள சௌடேஸ்வரி கல்லூரியில் காலை 9 மணிக்கு தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், காலை 561 பேர் தேர்வு எழுதி வருகின்றனர்.
பகல் 2 மணிக்கு 596 பேர் தேர்வு எழுதவுள்ள நிலையில், தேர்வு மையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
















