காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள தலைவர்களின் படங்கள், மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்த கட்சிப் போஸ்டர்கள் என அனைத்தும் அகற்றப்பட்டன. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்த கட்சி போஸ்டர்கள், அரசின் சாதனை திட்டங்கள் குறித்த புகைப்படங்களையும் அதிகாரிகள் அகற்றினர்.
அதேபோல், புதுக்கோட்டையிலும் சட்டமன்ற உறுப்பினரின் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அங்கிருந்த பொருட்கள் அனைத்தையும் அலுவலக ஊழியர்கள் எடுத்துச் சென்றனர்.
மேலும், வேலூரில் ஆட்சியர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் கருணாநிதியின் படங்கள் அகற்றப்பட்டன. இதன் காரணமாக மக்களும் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி நடக்குமாறு தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
















