திருப்பூரில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையின்போது, 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அவிநாசி சாலை மேம்பாலம் அருகே, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படையினர், அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
இருசக்கர வாகனத்தில் வந்த பங்கஜ் என்பவர் அணிந்திருந்த பேக்கில், 35 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால், பறக்கும் படையினர் அந்தப் பணத்தை கைப்பற்றி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்றுச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து ரயில் மூலம் திருப்பூர் வந்த பங்கஜ், ஃபேப்ரிக் கொள்முதல் செய்ய அந்த பணத்தை கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
















