அமெரிக்காவில் நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் One Battle After Another திரைப்படம் 6 விருதுகளையும், Sinners – 4 விருதுகளையும் குவித்து அசத்தியுள்ளன.

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளராக நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். விழாவின் முதல் விருதாக, Weapons படத்தில் நடித்த எமி மேடிகனுக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் Hamnet படத்தில் நடித்த Jessie Buckley-க்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது…
சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான விருதை ‘ Frankenstein ‘ படம் தட்டிச் சென்றது. One Battle After Another, Frankenstein போன்றவற்றிற்கு சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. ‘One Battle After Another’ படத்தில் தனது அபார நடிப்பை வெளிப்படுத்திய சீன் பென்னுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும், கசாண்ட்ராவுக்கு சிறந்த கதாபாத்திர வடிவமைப்புக்கான விருதும் வழங்கப்பட்டது. இதேபோன்று 6 விருதுகளை இப்படம் வென்றுள்ளது.

சிறந்த அசல் திரைக்கதைக்கான விருது Sinners படத்துக்காக இயக்குநர் ரயான் கூக்ளருக்கு வழங்கப்பட்டது. இந்தத் திரைப்படம் 16 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் என்ற சாதனையையும் நிகழ்த்தியது. சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த அசல் இசை போன்ற விருதுகளையும் சின்னர்ஸ் திரைப்படம் தட்டித்தூக்கியது. இத்திரைப்படத்தில் நடித்த Michael B. Jordan-க்கு சிறந்த நடிகருககான விருது வழங்கப்பட்டது.
இப்படத்தின் ஒளிப்பதிவாளர் Autumn Durald Arkapaw ஆஸ்கர் வரலாற்றில் ஒளிப்பதிவு பிரிவில் விருது பெறும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றார். அசல் இசைக்கான விருது பெற்ற லுட்விக் கோரான்சனுக்கு, பிளாக் பாந்தர், ஓப்பன்ஹெய்மருக்கு அடுத்தபடியாக 3வது முறையாக ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது.
சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருது K-Pop Demon Hunter என்ற படத்திற்கும், சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் விருது The Girl Who Cried Pearls என்ற படத்திற்கும் வழங்கப்பட்டது.
பிரமாண்டத்திற்கு பெயர் பெற்ற இயக்குநர் ஜேம்ஜ் கேமரூனின் Avatar: Fire and Ash திரைப்படம் சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ்-க்கான ஆஸ்கர் விருதை பெற்றது.
ரஷ்ய அரசியல் சூழலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட Mr.Nobody Against Putin திரைப்படம் சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை பெற்றது.
நார்வே இயக்குநர் ஜோஹிம் டிரையர் இயக்கத்தில் வெளியான Sentimental Value சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான விருதை தட்டிச்சென்றது.
Live Action Short பிரிவில் ‘தி சிங்கர்ஸ்’ மற்றும் ‘டு பீபுள் எக்ஸ்சேஞ்சிங் சலைவா’ ஆகிய இரண்டு படங்களுக்கு விருது பகிர்ந்து அளிக்கப்பட்டது. ஆஸ்கர் வரலாற்றில் இது 7-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
















