சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைக்கான பிசிசிஐ விருது, சுப்மன் கில் மற்றும் ஸ்மிருதி மந்தனாவுக்கு வழங்கப்பட்டது.
சிறந்த வீரருக்கான, பாலி உம்ரிகர் விருது, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி அணி கேப்டன் சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது.
இவர், இரண்டாவது முறையாக இந்த விருதை பெற்றார். இதேபோல், கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் 1703 ரன்கள் குவித்த ஸ்மிருதி மந்தனாவுக்கு சிறந்த வீராங்கனைக்கான விருது வழங்கப்பட்டது. இவர் 5வது முறையாக இந்த விருதை பெற்றுள்ளார். 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கும், மகளிர் உலகக்கோப்பை வென்ற இந்திய அணி வீராங்கனைகளுக்கும் பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
















